சுடச்சுட

  

  கொல்லங்குடி காளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

  By DIN  |   Published on : 16th March 2019 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியில் அமைந்துள்ள வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  இக் கோயிலில் பங்குனி திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்துக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, திருவிழாவுக்கான கொடி ஏற்றப்பட்டது.
  விழாவில், தினசரி காலை, மாலை வேளைகளில் சிம்மம், காளை, குதிரை, காமதேனு, கிளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய திருவிழாவான தேரோட்டம் மார்ச் 23 ஆம் தேதியும், பூப்பல்லக்கு மார்ச் 24 ஆம் தேதியும், மார்ச் 25 ஆம் தேதி உற்சவ சாந்தி உள்ளிட்ட வைபவங்களுடன் பங்குனி திருவிழா நிறைவு பெறுகிறது.
  இதில், கொல்லங்குடி, சிவகங்கை, காளையார்கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai