சுடச்சுட

  

  ராமநாதபுரம் முஸ்லிம் லீக் வேட்பாளர் திமுக.வினரைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்

  By DIN  |   Published on : 17th March 2019 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி கூட்டணி கட்சிப் பிரமுகர்களை சனிக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
  ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி போட்டியிடுகிறார். அவர் சனிக்கிழமை காலை ராமநாதபுரத்தில்  கட்சியின் நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
  இதனைத்தொடர்ந்து அவர், திமுக மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம்,  திமுக மகளிரணிப் பிரமுகர் பவானி ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் 
  சுப.தங்கவேலன், வ.சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்டச் செயலர் திவாகரன், நகரச் 
  செயலர் கார்மேகம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் (பரமக்குடி) திசைவீரன், பரமக்குடி நகரச் செயலர் சேதுகருணாநிதி உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு 
  திரட்டினார். 
  அவருடன்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த  கடையநல்லூர்சட்டப்பேரவை உறுப்பினர் முகமது அபுபக்கர், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி கட்சிப் பொறுப்பாளர் ஷாஜகான், மாவட்டத் தலைவர் வருசை முகமது, செயலர் முகமது பைசல் ஆகியோர் உடன் சென்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai