மானாமதுரை மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா தொடக்கம்

மானாமதுரையில் தயாபுரம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.


மானாமதுரையில் தயாபுரம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் 37 ஆவது ஆண்டு பங்குனித் திருவிழா தொடங்கியதையொட்டி காப்புக்கட்டுதல் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி மூலவர் முத்துமாரியம்மனுக்கும் கோயில் பரிவார தெய்வங்களுக்கும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர். மூலவருக்கும், காப்பு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து 11 நாள்கள் விழா நடைபெறுகிறது.
விழா நாள்களின்போது தினமும் இரவு மண்டகப்படிதாரர்கள் சார்பில் முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும். 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பொங்கல் உற்சவம் மார்ச் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றையதினம் காப்புக்கட்டி விரதம் இருந்து வரும் பக்தர்கள், மானாமதுரை வைகையாற்றிலிருந்து பால்குடங்கள், அக்னிச்சட்டிகள் எடுத்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்து  அம்மன் சன்னதி எதிரே தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். பலர் மாவிளக்கு பூஜை நடத்தியும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இதன் பின் 26 ஆம் தேதியுடன் இந்தாண்டு பங்குனித் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com