காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி விழா

காரைக்குடி மீனாட்சிபுரம்  முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஏராளமான

காரைக்குடி மீனாட்சிபுரம்  முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் திரண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
இக்கோயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) கொடியேற்றத்துடன் திருவிழா 
தொடங்கியது. விழாவில் தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.  
வரும் செவ்வாய் (மார்ச் 19) மற்றும் புதன்கிழமை (மார்ச் 20)களில் கோயில் கரகம், மதுக்குடம், முளைப்பாரி, பால்குடம், கோயில்காவடி, பூக்குழி, அக்னிச்சட்டி போன்ற அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல் நடைபெறும். 
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே பக்தர்கள் கூட்டம் அதிகம் வரத்தொடங்கியதால், அம்மனுக்கு காப்புக் கட்டிய நாள் முதலே பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி போன்ற நேர்த்திக் கடன்களைச் செலுத்தி வருகின்றனர். 
அதேபோன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் முத்தாளம்மன் கோயிலில் திரண்ட ஆயிரக் கணக்கான பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி போன்றவற்றை சுமந்துகொண்டு ஊர்வலமாக அம்மன் சன்னதி, செக்காலைச்சாலை, முத்துப்பட்டிணம் முதல்வீதி வழியாக முத்துமாரியம்மன் கோயிலை அடைந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு நேர்த்திக்கடனைச் செலுத்தி வழிபட்டனர்.
ஏராளமான பக்தர்கள் திரண்டதால் இப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்பகுதிகளில் பேருந்துகள், கனரக வாகனங்கள் செல்வதற்கு போலீஸார் தடை விதித்து, அவற்றை மாற்று வழியில் திருப்பிவிட்டனர். 
காரைக்குடி டி.எஸ்.பி அருண் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண் டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com