அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேசிய கருத்தரங்கம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மகளிரியல் துறை சார்பில் "பெண்கள் கடத்தலை தடுத்தல்' பற்றிய தேசிய கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மகளிரியல் துறை சார்பில் "பெண்கள் கடத்தலை தடுத்தல்' பற்றிய தேசிய கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நா. ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசியது: சமூகத்தில் உள்ள மூட பழக்கவழக்கங்களாலும், தடைகளாலும் பல்வேறு விதமான இன்னல்களுக்கு பெண்கள் உள்ளாக்கப்படுகின்றனர். சமுதாயத்தில் இதுபோன்ற இன்னல்கள் தொடராமல் இருப்பதற்கு உயர் கல்வி பயிலும் மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  இன்றைய காலச்சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் எவற்றைச் செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று அறிந்து நடந்து கொண்டால் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகாமல் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம் என்றார்.
இதில் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆஷா சுக்லா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியது: பெண்களுக்கு எதிரான இன்னல்கள் அனைத்தும் மனித உரிமை மீறல்கள் சார்ந்த பிரச்னைகளாகும். இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் பெண்கள் பாதுகாப்புக்காக பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதனை பெண்கள் அறிந்து கொள்ளுதல் மிகவும் அவசியமாகும். பெண்கள் கட்டாயத் திருமணங்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான கட்டாயத் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றங்கள் பதிவு செய்யப்படாமல் மறைக்கப்படுகின்றன. இது தேசிய அளவில் பெரும் பிரச்னையாக உள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com