தேர்தலில் இடம்பெறும் வெற்று வாக்குறுதிகள்: சாக்கோட்டைப் பகுதி வாக்காளர்கள் அதிருப்தி

தேர்தலின்போது மட்டும் இடம்பெறும் வாக்குறுதிகள் கடந்த 20 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாததால் காரைக்குடி

தேர்தலின்போது மட்டும் இடம்பெறும் வாக்குறுதிகள் கடந்த 20 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாததால் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றிய கிராமங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற வுள்ளது. சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காரைக்குடி சட்டபேரவைத் தொகுதியும் அடங்கும். காரைக்குடி வட் டம், சாக்கோட்டை ஒன்றியத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெரியதும், சிறியதுமான கிராமங்கள் உள்ளன. இவற்றில்   சுமார் 35 ஆயிரம் வாக்காளர்களும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவர் கூறியது: சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்கள் அனைத்தும் நெல், காய்கறி சாகுபடி போன்ற வேளாண்மைதான் பிரதான தொழில். மாற்றுத் தொழில் என்றால் புதுவயலில் இயங்கிவரும் அரிசி உற்பத்திஆலைகள் தான். இவற்றில் பெரும்பாலானவை இயந்திரமயமாகிவிட்டதால், இளைஞர்கள், பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் என எதுவும் இப்பகுதியில் இல்லை. மக்களவைத்தேர்தல், சட்ட பேரவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் போன்ற தேர்தல் நேரங்களில் போட்டிப் போட்டுக் கொண்டு அரசியல்வாதிகள் வாக்குறுதிகளுடன் பிரசாரம் செய்வர். அதாவது இப்பகுதியில் வேளாண்மைக் கல்லூரி கொண்டு வரப்படும், இப்பகுதியைச் சேர்ந்த பீர்க்கலைக்காடு, பெரியகோட்டை, மித்திராவயல், மித்திரங்குடி, பெத்தாட்சிக் குடியிருப்பு உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடியாகும் காய்கறிகளைப் பதப்படுத்துதல் தொழில் ஏற்படுத்தப்படும், பெரியகோட்டைப் பகுதியில் அதிகம் விளையும் மல்லிகை பூவைக் கொண்டு வாசனைத் திரவியம் (சென்ட்) உற்பத்தி ஆலை ஏற்படுத்தப்படும் என வாக்குறுதிகளை அள்ளி 
வீசுவர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. இவை மூன்றும் அமைந்தால் இப்பகுதி மக்களுக்கு பயனுடையதாக இருக்கும். இப்பகுதியும் விரைவாக வளர்ச்சியடையும். தற்போது தேர்தலும் வந்துவிட்டது. வழக்கம் போல் இந்த வாக்குறுதிகளும் பிரசாரத்தில் இடம்பெற்றாலும், நிறைவேற்றப்படுமா?  என இப்பகுதி வாக்காளர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com