தேர்தல் விதிமுறைகள் விளக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்
By DIN | Published On : 24th March 2019 12:37 AM | Last Updated : 24th March 2019 12:37 AM | அ+அ அ- |

மானாமதுரையில் வெள்ளிக்கிழமை மாலை தேர்தல் விதிமுறைகள் குறித்து விளக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலர் திருவாசகம் கலந்து கொண்டு அரசியல் கட்சியினர் தொகுதியில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கினார். மேலும் அரசியல் கட்சியினர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். இக்கூட்டத்தில் மானாமதுரை டி.எஸ்.பி கார்த்திகேயன், வட்டாட்சியர்கள் யாஸ்மின், ராஜா மற்றும் தொகுதியைச் சேர்ந்த அதிமுக, திமுக, அமமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.