Enable Javscript for better performance
அகதிகள் முகாமில் முறைகேடான குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அகதிகள் முகாமில் முறைகேடான குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

    By DIN  |   Published on : 28th March 2019 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இலங்கை அகதிகள் முகாமில் முறைகேடாக கொடுக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகளை போலீஸார் புதன்கிழமை துண்டித்தனர். 
     மானாமதுரை மூங்கில் ஊருணி பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு ஏராளமான அகதிகள் குடும்பத்தினர் தங்கியுள்ளனர். மாங்குளம் ஊராட்சி பகுதியில்  அமைந்துள்ள அகதிகள் முகாமுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் பொதுக்குடிநீர் குழாய் இணைப்புகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் இணைப்புகளிலிருந்து இங்கு வசிக்கும் மக்கள் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந் நிலையில் முகாமில் வசிக்கும் சில அகதிகள் குடும்பத்தினர்  பொது குழாய்களில் இணைப்புக் கொடுத்து தங்கள் வீடுகளுக்கு மட்டும் தனியாக குடிநீர் குழாய் இணைப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். இதனால் பொதுக்குழாய்களில் தண்ணீர் சரியாக வருவதில்லை என முகாமில் வசிக்கும் மற்றவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கியூ பிராஞ்ச் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு பொதுக்குழாய்களில் உடைப்பு ஏற்படுத்தி அதிலிருந்து முறைகேடாக வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட குழாய் இணைப்புகளை துண்டித்தனர். அதைத்தொடர்ந்து பொதுக்குழாய் இணைப்புகளில் குடிநீர் சீராக வருவதாக அகதிகள் தெரிவித்துள்ளனர்.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai