Enable Javscript for better performance
ஏ.டி.எம்.-மில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ.2.50 லட்சம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    ஏ.டி.எம்.-மில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ.2.50 லட்சம் பறிமுதல்

    By DIN  |   Published on : 28th March 2019 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் புதன்கிழமை முறையான ஆவணங்கள் இல்லாமல் ஏ.டி.எம். இயந்திரத்தில் நிரப்பக் கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.50 லட்சத்தை பறக்கும்படை வட்டாட்சியர் பறிமுதல் செய்தார். 
    ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பும் நிறுவனத்தில் பணி செய்பவர் தங்கலிங்கம். இவர் மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக மதுரையிலிருந்து வேனில் பணத்தை கொண்டு வந்தார். திருப்பாச்சேத்தி அருகே வந்தபோது தேர்தல் பறக்கும்படை வட்டாட்சியர் முருகன் மற்றும் போலீஸார் இந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ 7.50 லட்சம் இருந்தது.  இதில் ரூ 5 லட்சத்துக்கு தங்கலிங்கம் ஆவணங்கள் வைத்திருந்தார். மீதி தொகை  ரூ. 2.50 லட்சத்துக்கு முறையான ஆவணங்கள் காட்டப்படவில்லை. இதையடுத்து இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு மானமதுரை சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
    கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே வாகன சோதனையில் முறையான ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.59 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். 
    கமுதி  கோட்டைமேடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி பழனிக்குமார் தலைமையிலான குழு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு லாரியை சோதனையிட்டபோது பழனியை சேர்ந்த கனகராஜா மகன் கார்த்திகேயனிடம் முறையான ஆவனங்களின்றி வைத்திருந்த ரூ.59,080 பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரனையில் கார்த்திகேயன் பழனியில் விபூதி வியாபாரம் செய்பவர் என தெரியவந்துள்ளது. முறையான ஆவணங்களை சமர்பித்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு பறக்கும்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில்  உரிய ஆவணம் இன்றி வைத்திருந்த ரூ.1லட்சத்து 13 ஆயிரத்தை புதன்கிழமை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    முதுகுளத்தூர் - பரமக்குடி சாலை யில்  செல்வநாயகபுரம் ஆற்றுபாலத்தின் அருகே பறக்கும்படை அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது உரிய ஆவணமின்றி வெவ்வேறு ஆட்டோவில் வந்த ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த அகமது மகன் குலாம்முகமதுவிடம் ரூ.51,100, சம்சுதீன் மகன் அப்துல்மசீத்திடம் ரூ.62,100 பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை ராமநாதபுரம் கண்காணிப்பு அறையில் ஒப்படைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai