Enable Javscript for better performance
"கட்சிக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை தலைமை சரி செய்யும்- Dinamani

சுடச்சுட

    

    "கட்சிக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை தலைமை சரி செய்யும்

    By DIN  |   Published on : 28th March 2019 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    'கட்சிக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை கட்சியின் தலைமை சரி செய்யும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்தார்.
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். 
    சிவகங்கை தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து கட்சிப் பணியாற்றியுள்ளார். அவர் இத்தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. 
    அதிமுக, பாஜக கூட்டணி எந்தக்கொள்கையும் இல்லாத கூட்டணி. தமிழகத்தில் அதிமுக அரசு மத்திய அரசின் கைப் பாவையாக செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி வெறும் வாக்குறுதிகளை மட்டுமே அளித்து மக்களை ஏமாற்றியுள்ளார். 
    ஆனால் காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தின் ஜனநாயகத்தையும், மரியாதையையும் காக்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஜி.எஸ்.டி வரி மாற்றியமைக்கப்படும். ஏழை மக்களுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் வழங்கப்படும் என்றார்.
    அப்போது சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப. சிதம்பரம், காங்கிரஸ் கட்சி சிவகங்கை மாவட்டத்தலைவர் ப. சத்தியமூர்த்தி, காரைக்குடி முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் என். சுந்தரம் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai