Enable Javscript for better performance
கார்த்தி சிதம்பரத்துக்கு சுதர்சன நாச்சியப்பன் ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    கார்த்தி சிதம்பரத்துக்கு சுதர்சன நாச்சியப்பன் ஆதரவு

    By DIN  |   Published on : 28th March 2019 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திற்கு சுதர்சன நாச்சியப்பன் ஆதரவு தெரிவிப்பதாக செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தார்.
    சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட முன்னாள் மத்திய அமைச்சர் சிவகங்கையைச் சேர்ந்த இ.எம். சுதர்சன நாச்சியப்பன் கட்சி மேலிடம் மூலமாக முயற்சி மேற்கொண்டார். ஆனால் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்தனர். 
    இதற்கு சுதர்சன நாச்சியப்பன் எதிர்ப்புத் தெரிவித்தாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு காரைக்குடியில் உள்ள ப. சிதம்பரம் எம்.பி. அலுவலகம் வந்த சுதர்சன நாச்சியப்பன், கார்த்தி சிதம்பரத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். 45 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் உள்ள உணர்வுடன் இங்கு வந்தேன். கை சின்னம் வெற்றிபெறும். மத்தியில் ராகுல் காந்தி பிரதமராக வர  காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்றார்.
     அவருடன் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் கே.ஆர். ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ என். சுந்தரம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai