Enable Javscript for better performance
சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு பொதுப் பார்வையாளர் வருகை- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு பொதுப் பார்வையாளர் வருகை

    By DIN  |   Published on : 28th March 2019 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மக்களவைத் தேர்தல் மற்றும் மானாமதுரை(தனி) சட்டப்பேரவைத் தேர்தல் பொதுப் பார்வையாளர் ஹர்ப்ரித் சிங் வருகை தந்துள்ளதாக சிவகங்கை மாவட்டத் தேர்தல் அலுவலரும்,மாவட்ட ஆட்சியருமான ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
    இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  சிவகங்கை மக்களவை மற்றும் மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலுக்கான செலவின பார்வையாளராக சத்திய பிரகாஷ் ஆர்சிங் மற்றும் விவேக்பிஉமாப் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். சிவகங்கை மக்களவைத் தேர்தல் மற்றும் மானாமதுரை (தனி) சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பொதுப் பார்வையாளராக ஹர்ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுப் பார்வையாளர் மற்றும் செலவினப் பார்வையாளர்களின் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ராணி வேலுநாச்சியார் விருந்தினர் மாளிகையில் செயல்பட்டு வருகிறது. ஆகவே சிவகங்கை மக்களவை மற்றும் மானாமதுரை (தனி) இடைத் தேர்தல் குறித்து புகார் மற்றும் தகவல் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரடியாகவோ அல்லது 94864 16724 என்ற   எண்ணில் தொடர்பு கொண்டோ தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai