Enable Javscript for better performance
சிவகங்கை மக்களவைத் தொகுதி: 28 மனுக்கள் ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து,விண்ணப்பித்த பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரம் உள்ளிட்ட 28 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 
    தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மார்ச் 19 முதல் மார்ச் 26 வரை நடைபெற்றது. 
    வேட்பு மனுக்கள் அனைத்தும் புதன்கிழமை (மார்ச் 27) பரிசீலனை செய்யப்பட்டன. அதனடிப்படையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற வேட்பு மனு தாக்கல் பரிசீலனை கூட்டத்துக்கு சிவகங்கை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும்,மாவட்ட ஆட்சியருமான ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தார். தேர்தல் பொதுப் பார்வையாளர் ஹர்ப்ரித் சிங் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா உடனிருந்தார்.
    சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்தி ப.சிதம்பரம்,மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நடிகர் சினேகன்,அமமுகவைச் சேர்ந்த தேர்போகி வே.பாண்டி,நாம் தமிழர் கட்சி சார்பில் சக்திப்பிரியா,தமிழ் மாநில சிவசேனை,பகுஜன் சமாஜ் கட்சி,எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களாக மொத்தம் 40 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
    அதில்,பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்தி ப.சிதம்பரம்,மக்கள் நீதி மய்யத்தின்  சார்பில் நடிகர் சினேகன்,அமமுகவைச் சேர்ந்த தேர்போகி வே.பாண்டி, நாம் தமிழர் கட்சி  சார்பில் சக்திப்பிரியா,தமிழ் மாநில சிவசேனை, பகுஜன் சமாஜ் கட்சி,எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழகம்  உள்ளிட்ட கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 28 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
    வேட்பாளர்கள் கூடுதலாக விண்ணப்பித்த 12 மனுக்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டது. 
    இதையடுத்து, வரும் மார்ச் 29,மாலை 3 மணி வரை மனுக்கள் ஏற்கப்பட்ட வேட்பாளர்கள் யாரேனும் வேட்பு மனுவை திரும்ப பெற விரும்பினால் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக்தில் செயல்பட்டு வரும் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பத்து தங்களது வேட்பு மனுவை திரும்ப பெறலாம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai