Enable Javscript for better performance
தேவகோட்டையில் இளைஞர் வெட்டிக் கொலை: 8 பேர் கைது: சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தேவகோட்டையில் இளைஞர் வெட்டிக் கொலை: 8 பேர் கைது: சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 28th March 2019 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேவகோட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட  வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அவரது உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து தேவகோட்டை அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    தேவகோட்டை நகராட்சி அதிமுக முன்னாள் உறுப்பினர் சேவுகன். இவர் செவ்வாய்க்கிழமை தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஜெயராமன் மகன் பிரகாஷ் என்பவர் சேவுகனை தாக்கியுள்ளார். இதுகுறித்து சேவுகன் பிரகாஷ் மீது தேவகோட்டை நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் ஜெயராமன் மற்றும் சேவுகன் ஆதரவாளர்களிடம் சமரசம் பேசிக் கொண்டிருந்தனர்.
    இதற்கிடையே செவ்வாய்க்கிழமை இரவு சேவுகனின் ஆதரவாளரான தேவகோட்டை நடராஜபுரம் 3 ஆவது வீதியில் வசிக்கும் மாணிக்கம் மகன் பிரபுவை (26) பத்து பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. உறவினர்கள் பிரபுவை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். பிரபு வெளிநாட்டில் இருந்துவிட்டு 10 நாள்களுக்கு முன்புதான் சொந்த ஊர் வந்துள்ளார். இதுகுறித்து தேவகோட்டை நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் ஏ.எஸ்.பி. கிருஷ்ணராஜ் சென்று விசாரணை நடத்தினார்.
    இந்நிலையில் பிரபுவின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஏ.எஸ்.பி. கிருஷ்ணராஜ், டி.எஸ்.பி. அண்ணாதுரை, ஆய்வாளர்கள் ஆத்மநாதன், கீதா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகள் விரைவில் பிடிக்கப்படுவார்கள் எனக் கூறியதையடுத்து சடலத்தை பெற்றுச் சென்றனர். பின்னர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீஸார் சுப்பையா மகன் ஜெயராமன் (50), ஜெயராமன் மகன்கள் பிரவின் (22),  பிரகாஷ்,  சின்னத்தம்பி மகன்கள் முத்துக்குமார், முருகானந்தம் (28) , சிங்கமுகம் மகன் பாபு (24), சுப்பையா மகன் செந்தில் (36), கதிரேசன் மகன் சந்தோஷ் (22), அருணகிரிபட்டினத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் முத்துச்சாமி (20), ஜெயராமன் மகன் சுப்பையா (39) ஆகிய 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 8 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பிரகாஷ், முத்துக்குமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai