Enable Javscript for better performance
சாலையோரங்களில் படர்ந்துள்ள  சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சாலையோரங்களில் படர்ந்துள்ள  சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

    By DIN  |   Published On : 02nd May 2019 07:18 AM  |   Last Updated : 02nd May 2019 07:18 AM  |  அ+அ அ-  |  

    பிரமனூர்-அச்சங்குளம் வரையிலான சாலையோரங்களில் படர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரிலிருந்து வன்னிகோட்டை, பிரமனூர் ஆகிய கிராமங்கள் வழியாக அச்சங்குளம் கிராமத்துக்கு தார் சாலை உள்ளது. இந்த சாலையில் பிரமனூரிலிருந்து அச்சங்குளம் வரை சுமார் 4 கி.மீ., தொலைவு சாலையில் இருபுறங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் படர்ந்துள்ளன. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
    மேலும் இரவு நேரங்களில் வழிப்பறி அல்லது திருட்டு சம்பவங்களும் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அச்சப்படுகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
    எனவே இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பிரமனூர்-அச்சங்குளம் சாலையோரங்களில் படர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp