கௌரவ விரிவுரையாளர்கள் பணிக்கு மே 22 இல் நேர்காணல்
By DIN | Published On : 16th May 2019 07:08 AM | Last Updated : 16th May 2019 07:08 AM | அ+அ அ- |

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் வரும் 22 ஆம் தேதி கௌரவ விரிவுரையாளர்களுக்கான நேர்காணல் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் மா. ராஜேந்திரன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இக்கல்லூரியில் வணிகவியல், இயற்பியல் மற்றும் விலங்கியல் பாடப்பிரிவுகளுக்கு தலா ஒரு கௌரவ விரிவுரையாளர் பணியிடம் காலியாக உள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு இன சுழற்சியின் அடிப்படையில் நிரப்புவதற்கு 22.05.2019 அன்று காலை 11 மணிக்கு கல்லூரி முதல்வர் அறையில் நேர்காணல் நடை பெறவுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்துள்ள சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் கல்வித்தகுதி (பி.ஹெச்.டி/சிலெட் அல்லது நெட்) பெற்றுள்ள போட்டியாளர்கள் தங்களது கல்வி, அனுபவம், இனம் மற்றும் பிற சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.