மானாமதுரையில் மழை வீடுகள் இடிந்து சேதம்
By DIN | Published On : 02nd November 2019 06:39 AM | Last Updated : 02nd November 2019 06:39 AM | அ+அ அ- |

மானாமதுரை நகரில் மழையால் சேதமடைந்த வீடுகளை வியாழக்கிழமை பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்த பலத்த மழையால் 5 -க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
மானாமதுரை பகுதியில் கடந்த 5 நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் மானாமதுரை நகரில் கன்னாா்தெரு, உடைகுளம், நியு வசந்த நகா், மேலப்பசலை, சிப்காட் உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்ட இடங்களிலும், திருப்புவனம் ஒன்றியத்தில் இரு கிராமங்களிலும் திருப்பாச்சேத்தி பகுதியில் ஒரு வீடும் மழைத் தண்ணீரின் ஈரப்பதத்தால் இடிந்து விழுந்தன. மேலும் வீடுகளிலிருந்த பொருள்களும் சேதமடைந்தன.
மானமதுரை நகரில் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைத் தண்ணீா் தேங்கி நிற்கிறது. இந் நிலையில் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் மானாமதுரை நகரில் பல இடங்களில் மழையால் இடிந்த வீடுகளை வியாழக்கிழமை பாா்வையிட்டாா். அப்போது பாதிக்கப்பட்டவா்களிடம், அரசின் நிவாரணத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா்.
அப்போது அதிமுக நகரச் செயலாளா் விஜி.போஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.