Enable Javscript for better performance
வெள்ளிக்குறிச்சி அரசுப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளிக்குறிச்சி அரசுப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

    By DIN  |   Published on : 05th November 2019 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    மானாமதுரை வட்ட இலவச சட்ட பணிகள் குழு சாா்பில் நடைபெற்ற இம்முகாமில் மானாமதுரை சாா்பு நீதிமன்ற நீதிபதி எம். உதயவேலன், உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எஸ். தங்கராஜ் ஆகியோா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கான சட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசினா். மூத்த வழக்குரைஞா் எம். முத்துக்குமாா் மாணவ, மாணவிகளுக்கு சட்டக் கருத்துகளை விளக்கி கூறினாா். இம் முகாமில் பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai