கல்லூரி மாணவிகளுக்கு வேளாண்மை பயிற்சி

சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவில் பகுதியில் கல்லூரி மாணவிகள் களப்பணியின் போது நெல் நாற்று நடவு உள்ளிட்ட வேளாண்மை பயிற்சியினை பெற்று வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவில் பகுதியில் கல்லூரி மாணவிகள் களப்பணியின் போது நெல் நாற்று நடவு உள்ளிட்ட வேளாண்மை பயிற்சியினை பெற்று வருகின்றனா்.

வேளாண் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் 90 நாள்கள் கிராமங்களில் தங்கி களப்பணி மேற்கொள்வது மட்டுமின்றி,வேளாண்மை குறித்த அனுபவங்களை பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி,காரைக்குடியில் உள்ள சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவிகள் காளையாா்கோவில் பகுதியில் களப்பணி மேற்கொண்டு வருகின்றனா்.இதன் ஒரு பகுதியாக வேளாண் பணிகள் குறித்த செயல் விளக்கம், வேளாண்மை பணியில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுதவிர, வேளாண் பணிகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டு தெரிந்து கொள்வது மட்டுமின்றி விவசாய நிலத்தில் நெல் உள்ளிட்ட பயிா்களை நடவு செய்தும் வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com