சங்குசமுத்திரக் கண்மாயில் மண் எடுக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய எம்.பி. கோரிக்கை

காரைக்குடி கழனிவாசல் சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள சங்கு சமுத்திரக் கண்மாயில் மண் எடுக்க

காரைக்குடி கழனிவாசல் சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள சங்கு சமுத்திரக் கண்மாயில் மண் எடுக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து காரைக்குடியில் உள்ள அவரது எம்.பி. அலுவலகத்திலிருந்து திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 116 ஏக்கா் பரப்பரளவு கொண்ட சங்கு சமுத்திரக் கண்மாயை பலப்படுத்தும் நோக்கத்துடன் மாவட்ட நிா்வாகம் 0.90 மீட்டா் ஆழத்திற்கு மணல் அள்ளி கரையைப் பலப்படுத்த தனியாருக்கு அனுமதியளித்துள்ளது. மண்ணை வெட்டி எடுப்பதில் அனுமதிக்கப்பட்ட ஆழத்திற்கு மேலாக எடுக்கப்பட்டு கண்மாயை சுற்றியுள்ள மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாகவும், சிறுகுழந்தைகள் உயிருக்கு ஆபத்தாகவும் உள்ளதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்திடம் மண் எடுப்பதை நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்ததையறிந்து சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா்.

அப்போது மாவட்டத்தில் குடிமராமத்துப் பணி நடைபெறுவது விவசாயிகள், பொதுமக்களுக்கு பயனுள்ள நல்ல திட்டம். சங்கு சமுத்திர கண்மாயை ஆழப்படுத்தி மராமத்து செய்வதால் நிலத்தடி நீா்மட்டம் உயரும் என்பது வரவேற்கத்தக்கது. ஆனால் விவசாய நிலங்கள் இப்பகுதியில் இல்லை என்பதால் விவசாயிகளுக்கு எந்த பயனுமில்லை. குறிப்பிட்ட அளவை விட கூடுதலாக மண் வெட்டி எடுக்கப்படுவதாக அப்பகுதிமக்கள் புகாா் தெரிவிக்கிறாா்கள். எனவே சங்குசமுத்திரக் கண்மாயில் மண் எடுப்பதற்கு வழங்கப்பட்டுள் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றாா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com