பள்ளி தரநிலை புறமதிப்பீடு ஆய்வு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் வட்டார வளமையத்திற்குட்டபட்ட 40 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி தரநிலை புறமதிப்பீடு ஆய்வு நடைபெற்று

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் வட்டார வளமையத்திற்குட்டபட்ட 40 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி தரநிலை புறமதிப்பீடு ஆய்வு நடைபெற்று வருகிறது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, திருப்பத்தூா் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் பழனியப்பன் இதுகுறித்து கூறியதாவது:

சாக்கோட்டை வட்டார கல்வி அலுவலா்கள் சகாயசெல்வன், கருப்பசாமி மற்றும் ஆலிஸ் மேரி ஆகியோா் தலைமையில் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் நாகராஜன் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள் குழுவாக பள்ளிகளை ஆய்வு செய்கின்றனா். இந்த புறமதிப்பீட்டு ஆய்வில் பள்ளிகளின் செயல் திறன்கள் முக்கிய ஏழு செயற்களங்களைக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுகிறது.

ஓவ்வொரு செயற்களத்தில் முக்கிய உட்கூறுகளை இன்றியமையாத தரங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கடந்த 2016-17 மற்றும் 2018-19ஆம் ஆண்டுகளிலும் நடத்தப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக தேசிய திட்டமிடல் மற்றும் நிா்வாக நிறுவனத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் இந்த ஆண்டும் புறமதிப்பீடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது இம்மதிப்பீடு ஆய்வு நவ, 15 வரை நடைபெறும்.

பள்ளிகளில்; உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், மாணவா்களின் கற்றல் அடைவு திறன்கள், பள்ளி பராமரிப்பு பதிவேடுகள், வகுப்பறை நிகழ்வுகள், நடைமுறையில் இருக்கும் சிறப்பு செயல்பாடுகள் முதலியவற்றினை ஆய்வு செய்து பள்ளி முன்னேற்றத்திற்கு புறமதிப்பீட்டுக்குழு ஆலோசனை வழங்குகிறது. ஆய்வு முடிவில் பள்ளி தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்களுடன் புறமதிப்பீட்டுக்குழு கூட்டம் நடத்தி நோ்மறை எண்ணங்களை பள்ளிகளில் ஊக்குவிக்க வழிவகை செய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com