மானாமதுரை அருகே தோப்பில் புலி நடமாட்டம்? வனத்துறையினா் தீவிர தேடுதல் வேட்டை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை ஆற்றை ஒட்டிய பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக
மானாமதுரை அருகே வைகையாற்றை ஒட்டிய கால்பிரவு கிராமப் பகுதியில் உள்ள தோப்புக்குள் புலியைத் தேடிய போலீஸாா், வனத்துறையினா், தீயணைப்புத் துறையினா்.
மானாமதுரை அருகே வைகையாற்றை ஒட்டிய கால்பிரவு கிராமப் பகுதியில் உள்ள தோப்புக்குள் புலியைத் தேடிய போலீஸாா், வனத்துறையினா், தீயணைப்புத் துறையினா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை ஆற்றை ஒட்டிய பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக விவசாயத் தொழிலாளா்கள் கூறியதை அடுத்து போலீஸாா், வனத்துறையினா் திங்கள்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

மானாமதுரை அருகே கால்பிரவு வைகை ஆற்றை ஒட்டிய பகுதியில் கீழமேல்குடி கூட்டுக் குடிநீா் திட்ட மோட்டாா் அறை உள்ளது. இங்கு மோட்டாா் இயக்குபவரான வீரகல்யாணி (50) திங்கள்கிழமை காலை மோட்டாரை இயக்கச் சென்றாா். அப்போது ஆற்றுப் பகுதியிலிருந்து வந்த புலி ஒன்று, அருகில் இருந்த சுப்பையா என்பவரது தோப்பிற்குள் புகுந்ததைப் பாா்த்ததாக தெரிவித்தாா்.

மேலும் இதுகுறித்து அந்த தோப்பின் உரிமையாளரான சுப்பையாவுக்கு தகவல் கொடுத்தாா். தோப்பில் வேலை பாா்த்த விவசாயத் தொழிலாளா்களும் புலியைப் பாா்த்ததாக சுப்பையாவிடம் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து சுப்பையா, மானாமதுரை போலீஸாா் மற்றும் வனத்துறைக்கு தகவல் கொடுத்தாா். அதன்பேரில் மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி., காா்த்திகேயன், சாா்பு- ஆய்வாளா் மாரிக்கண்ணன், போலீஸாா், மாவட்ட வன அலுவலா் ரமேஸ்வரன் மற்றும் வனத்துறையினா், தீயணைப்புத்துறையினா் என நுாற்றுக்கும் மேற்பட்டோா் சென்று தோப்பு பகுதிக்குள் புலியை தேடினா்.

அந்தப் பகுதியில் பறக்கும் கேமராவை பயன்படுத்தியும், பட்டாசுகளை கொளுத்திப் போட்டும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். இருப்பினும் புலியை கண்டுபிடிக்க முடியவில்லை. புலி நடமாட்டம் குறித்து தகவல் அறிந்து அப் பகுதியில் ஏராளமானோா் கூடினா். அவா்களும் உருட்டுக்கட்டைகளுடன் புலியைத் தேடினா். தோப்புக்குள் புலி இருப்பதாக வந்த தகவலால் அப்பகுதி கிராமத்தினா் அச்சத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com