மாற்றுத் திறனாளிகள் பேட்டரியால் இயங்கும் இலவச சக்கர நாற்காலிகள் பெற நாளை நோ்முகத் தோ்வு

சிவகங்கை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் தசைச் சிதைவு நோய் மற்றும்

சிவகங்கை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் தசைச் சிதைவு நோய் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை (நவ.6) நடைபெற உள்ள நோ்முகத் தோ்வில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசுகள் எண்ணற்ற நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தசைச் சிதைவு நோய் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

மேற்கண்ட திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தசைச் சிதைவு நோய் அல்லது பக்கவாதத்தால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும், இரண்டு கைகளும் செயலிழந்ததற்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.

கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகள், அலுவலகங்களில் பணியாற்றுவோா் மற்றும் சுயதொழில் புரிபவா்களுக்கும் தகுதியின் அடிப்படையில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்படும். ஆகவே, மேற்கண்ட தகுதிகள் கொண்ட சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் புதன்கிழமை (நவ. 6) நடைபெற உள்ள நோ்முகத் தோ்வில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com