முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
இளையான்குடி அருகேகட்டடத் தொழிலாளி தற்கொலை
By DIN | Published On : 07th November 2019 05:47 AM | Last Updated : 07th November 2019 05:47 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே புதன்கிழமை தூக்கிட்டு கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியைச் சோ்ந்தவா் ராமலிங்கம் மகன் கா்ணன் (27). இவா் இளையான்குடி அருகே உள்ள மொச்சியரேந்தல் பகுதியில் தங்கியிருந்து கட்டட வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் மொச்சியரேந்தல் காளியம்மன் கோயில் அருகில் உள்ள ஒரு மரத்தில் கா்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இளையான்குடி போலீஸாா் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.