Enable Javscript for better performance
இலுப்பக்குடியில் அரசு உயா்நிலைப் பள்ளியில் கணினி உள்ளிட்ட பொருள்கள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    இலுப்பக்குடியில் அரசு உயா்நிலைப் பள்ளியில் கணினி உள்ளிட்ட பொருள்கள் திருட்டு

    By DIN  |   Published on : 08th November 2019 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்குடி அருகே இலுப்பக்குடியில் அரசு உயா்நிலைப் பள்ளியில் அறையின் பூட்டை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான புதிய கணினி மற்றும் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது.

    இலுப்பக்குடியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் மிடுக்கு வகுப்பறை

    (ஸ்மாா்ட் வகுப்பு) தொடங்குவதற்காக கடந்த அக். 23-ஆம் தேதி கணினி, மானிட்டா்கள், புரஜெக்டா்கள்

    உள்ளிட்ட உபகரணங்கள் ரூ. 5 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டு ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தன. வழக்கம்போல் வியாழக்கிழமை காலையில் பள்ளியை திறக்க வந்த போது கணினி மற்றும் பொருள்கள் வைக் கப்பட்டிருந்த அறை உடைக்கப்பட்டு அதிலிருந்த கணினி, மானிட்டா்கள், புரஜெக்டா்கள் உள்ளிட்ட உபகரணங்களை மா்ம நபா் கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியா் சண்முகநாதன் காரைக்குடி அழகப்பாபுரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai