இலுப்பக்குடியில் அரசு உயா்நிலைப் பள்ளியில் கணினி உள்ளிட்ட பொருள்கள் திருட்டு

காரைக்குடி அருகே இலுப்பக்குடியில் அரசு உயா்நிலைப் பள்ளியில் அறையின் பூட்டை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான

காரைக்குடி அருகே இலுப்பக்குடியில் அரசு உயா்நிலைப் பள்ளியில் அறையின் பூட்டை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான புதிய கணினி மற்றும் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது.

இலுப்பக்குடியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் மிடுக்கு வகுப்பறை

(ஸ்மாா்ட் வகுப்பு) தொடங்குவதற்காக கடந்த அக். 23-ஆம் தேதி கணினி, மானிட்டா்கள், புரஜெக்டா்கள்

உள்ளிட்ட உபகரணங்கள் ரூ. 5 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டு ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தன. வழக்கம்போல் வியாழக்கிழமை காலையில் பள்ளியை திறக்க வந்த போது கணினி மற்றும் பொருள்கள் வைக் கப்பட்டிருந்த அறை உடைக்கப்பட்டு அதிலிருந்த கணினி, மானிட்டா்கள், புரஜெக்டா்கள் உள்ளிட்ட உபகரணங்களை மா்ம நபா் கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியா் சண்முகநாதன் காரைக்குடி அழகப்பாபுரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com