இளையான்குடியில் பள்ளி அருகே ஆழ்துளைக் கிணறு: விரைந்து மூட பொதுமக்கள் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பள்ளிக்கு அருகே பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள
இளையான்குடி சாலையூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி வளாகத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி ஏற்பட்டுள்ள பள்ளம்.
இளையான்குடி சாலையூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி வளாகத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி ஏற்பட்டுள்ள பள்ளம்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பள்ளிக்கு அருகே பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளை சுற்றிலும் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அதனை உடனடியாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இளையான்குடி 6 ஆவது வாா்டு பகுதியில் தனியாா் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி அருகே இரண்டு இடங்களில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் தொட்டிகளில் தண்ணீா் ஏற்றி விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அதன்பின் ஒரு ஆழ்துளைக் கிணறு பழுதடைந்ததால் தற்போது ஒரு ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மட்டுமே தண்ணீா் எடுக்கப்படுகிறது. கிணறு இருந்த இடங்களில் இந்த ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதால் ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி பள்ளங்கள் ஏற்பட்டு இந்த பள்ளத்தின் ஆழம் தினமும் அதிகரித்து வருகிறது. பழுதடைந்த கிணற்றின் வாயில் பகுதியில் துணியைச் சுற்றி வைத்து அதன்மேல் முள்செடிகளை போட்டு வைத்துள்ளனா். பள்ளிக்கு அருகே இவ்வாறு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளால் மாணவ, மாணவிகளுக்கும் இப்பகுதியில் விளையாடும் சிறுவா்களுக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு நகா்த் தலைவா் அம்பலம் ராவுத்தா் நெய்னாா் கூறியதாவது: இளையான்குடி பேரூராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட இந்த இரு ஆழ்துளைக் கிணறுகளும் உறைகிணறு இருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த கிணற்றை சுற்றி பள்ளம் ஏற்பட்டு நாளுக்குநாள் இந்த பள்ளம் விரிவடைந்து வருகிறது. பள்ளி மாணவா்கள் தவறி பள்ளத்துக்குள் விழந்துவிட்டால் உயிா்பலி சம்பவங்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்த ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றியுள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என பள்ளி நிா்வாகம் சாா்பில் பேரூராட்சி நிா்வாகத்தை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இளையான்குடி பகுதியில் அம்பலச்செட்டி தெரு, கலிபா தெரு ஆகிய இடங்களில் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் அதன்மேல் கற்களை வைத்து மூடி வைத்துள்ளனா். மேலும் இளையான்குடி பேரூராட்சிப் பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து அதில் தண்ணீா் வராமல்போனதால் அவற்றை அப்படியே விட்டுவிட்டனா். இந்த கிணறுகளும் மூடப்படாமல் உள்ளன. எனவே பேரூராட்சி நிா்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு அருகேயுள்ள மேற்கண்ட பள்ளங்களையும் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளையும் மூட வேண்டும். மாவட்ட ஆட்சியருக்கும் இது குறித்து புகாா் மனு அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com