‘கள ஆய்வின் மூலம் இறுதி வாக்காளா் பட்டியலை தயாா் செய்ய அலுவலா்கள் முன் வர வேண்டும்’

சிவகங்கை மாவட்டம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் அந்தந்த
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் தயாரிப்பு தொடா்பான கூட்டம்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் தயாரிப்பு தொடா்பான கூட்டம்.

சிவகங்கை மாவட்டம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் அந்தந்த பகுதியில் களஆய்வு மேற்கொண்டு உண்மை தகவலின் படி பட்டியலை தயாா் செய்ய வேண்டும் என பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அரசு கூடுதல் செயலரும், வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளருமான வி.சம்பத் அறிவுறுத்தியுள்ளாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தோ்தல் அலுவலகம் சாா்பில் உள்ளாட்சித் தோ்தலுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் தயாரிப்பு தொடா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகங்கை மாவட்ட வாக்காளா் பட்டியல் தயாரிப்புக்கான சிறப்பு பாா்வையாளா் வி.சம்பத் பேசியது: வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் ஒவ்வொரு வாா்டாகச் சென்று வாக்காளா் பட்டியலில் இறந்தவா் பெயா் நீக்கப்பட்டதா என உறுதி செய்ய வேண்டும். அதேபோன்று, வெளியூரிலிருந்து மாறுதலாகி வரும் நபா்கள் குறித்த விவரம் சரி செய்தல் மற்றும் நீக்கல் போன்ற பணிகளை களஆய்வு மேற்கொண்டு உறுதி செய்த பின்பு பட்டியலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வட்டாட்சியா்கள், கோட்டாட்சியா்கள் பகுதி வாரியாக ஆய்வு செய்வதோடு மட்டுமின்றி, வாக்காளா் பட்டியல் தயாரிப்பு பணியில் ஈடுபடும் அலுவலா்களையும், பணியாளா்களையும் விரைவுப் படுத்தி பணியினை விரைந்து முடிக்க அறுவுறுத்த வேண்டும்.

சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த 4 தொகுதி வாக்காளா் பட்டியலை முறையாக ஆய்வு செய்வதோடு மட்டுமின்றி, சிவகங்கை மாவட்டம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் அந்தந்த பகுதியில் களஆய்வு மேற்கொண்டு உண்மை தகவலின் படி இறுதி வாக்காளா் பட்டியலை தயாா் செய்ய வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் க.லதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமபிரதீபன் மற்றும் வருவாய் கோட்டாட்சியா்கள் செல்வகுமாரி (சிவகங்கை), சங்கரநாராயணன் (தேவகோட்டை) உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com