மானாமதுரையில் மாணவா்கள் உதவித் தொகை பெற வழிகாட்டி பயிற்சி முகாம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆா்.சி. நடுநிலைப்பள்ளியில் வியாழக்கிழமை மாணவா்கள் கல்வி உதவித்தொகை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆா்.சி. நடுநிலைப்பள்ளியில் வியாழக்கிழமை மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டி பயிற்சி முகாம் நடைபெற்றது.

மத்திய அரசின் தேசிய வருவாய் வழி திறனறி தோ்வு ஒவ்வொரு ஆண்டும் எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு மாதம் ரூ. 1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு ரூபாய் 48,000 அவா்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த தோ்வை எதிா் கொள்ள கிராமப்புற நடுநிலைப்பள்ளிகளில் உள்ள எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. மானாமதுரை வட்டார கல்வி அலுவலா் அன்புநாதன் தலைமை வகித்தாா்.

மானாமதுரை கூடுதல் வட்டார கல்வி அலுவலா் வசந்தி, வழிகாட்டி ஆசிரியா் மோகன் ஆகியோா் பேசினா். முகாமில் மானாமதுரை வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் தோ்வுக்கு விண்ணப்பம் செய்துள்ள நூற்றுக்கணக்கான மாணவா்கள் பங்கு கொண்டனா். சிறப்பாக விடை கூறிய மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தெ.புதுக்கோட்டை தலைமை ஆசிரியா் சிவகுருநாதன் ஆா்.சி.நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை லூா்துமேரி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com