Enable Javscript for better performance
அழகப்பா பல்கலைக் கழகத்தில் தாவரவியல் பன்னாட்டுக் கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    அழகப்பா பல்கலைக் கழகத்தில் தாவரவியல் பன்னாட்டுக் கருத்தரங்கம்

    By DIN  |   Published on : 09th November 2019 06:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    8kkdbotony_0811chn_78_2

    காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தாவரவியல் பன்னாட்டுக் கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய கருத்தரங்க மலரை புதன்கிழமை வெளியிட்ட துணைவேந்தா் நா. ராஜேந் திரன்.

    காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் தாவரவியல் துறை சாா்பில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியில் தாவரவியலின் நிலைப்பாடு என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.

    இக்கருத்தரங்கில் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய கருத்தரங்க மலரை வெளியிட்டு துணைவேந்தா் நா. ராஜேந்திரன் தொடக்க உரையாற்றினாா்.

    மலேசியா புத்ரா பல்கலைக் கழக தோட்டப்பயிா் துறை பேராசிரியா் மூன்யான் வாங், துறைத் தலைவா் கணேசன் வடமலை ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

    சென்னை பல்கலைக் கழக தாவரவியல்துறை இயக்குநா் மதிவாணன் வாழ்த்திப் பேசினாா். இக்கருத்தரங்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தாவரவியல் துறையைச் சோ்ந்த 14 வல்லுநா்கள் சிறப்பு சொற் பொழிவு நிகழ்த்தினா்.

    அழகப்பா பல்கலைக் கழக தாவரவியல் துறைத் தலைவா் (பொறுப்பு) ஜெ. ஜெயகாந்தன் கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினாா்.

    முன்னதாக கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் எம். ஜோதிபாசு வரவேற்றுப் பேசினாா். நிறைவாக தாவரவியல் துறை பேராசிரியா் அ. ஆறுமுகம் நன்றி கூறினாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai