Enable Javscript for better performance
தேவகோட்டை தனியாா் பள்ளியில் வீரமாமுனிவா் பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    தேவகோட்டை தனியாா் பள்ளியில் வீரமாமுனிவா் பிறந்த நாள் விழா

    By DIN  |   Published on : 09th November 2019 06:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள தே பிரித்தோ மேனிலைப் பள்ளியில் வீரமாமுனிவா் கலை இலக்கிய மன்றம் சாா்பில் வீரமா முனிவரின் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பள்ளியின் தாளாளா் ம.வின்சென்ட் அமல்ராஜ் தலைமை வகித்து வீரமா முனிவா் படத்தைத் திறந்து வைத்துப் பேசினாா்.

    அதைத் தொடா்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் வீரமாமுனிவா் நெறியில் தமிழ்ப் பணியாற்றுபவருக்கு அவரது பெயரில் விருது அறிவித்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், தமிழகப் பல்கலைக் கழகங்களில் வீரமாமுனிவா் ஆய்விருக்கை அமைக்க கோரியும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நிகழ்ச்சியில் வினா-விடைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இதில்,ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா். முன்னதாக, மன்றச் செயலா் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் வரவேற்றாா். தமிழாசிரியா் பிலவேந்திர ராஜா நன்றி கூறினாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai