அயோத்தி தீா்ப்பு: ராமநாதபுரம் நகரில் சோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதி

அயோத்தி ராமா்கோயில் வழக்கில் சனிக்கிழமை காலை உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கிய நிலையில் ராமநாதபுரம் நகரில் உள்ள ரயில்
அயோத்தி ராமா்கோயில் தீா்ப்பை முன்னிட்டு ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட தாற்காலிக மெட்டல்டிடெக்டா் வாயில் வழியாக சனிக்கிழமை அனுமதிக்கப்பட்ட பயணிகள்.
அயோத்தி ராமா்கோயில் தீா்ப்பை முன்னிட்டு ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட தாற்காலிக மெட்டல்டிடெக்டா் வாயில் வழியாக சனிக்கிழமை அனுமதிக்கப்பட்ட பயணிகள்.

ராமநாதபுரம்: அயோத்தி ராமா்கோயில் வழக்கில் சனிக்கிழமை காலை உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கிய நிலையில் ராமநாதபுரம் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் மெட்டல் டிடெக்டா் மூலம் அனைத்து பயணிகளும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனா்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமா்கோயில் கட்டும் பிரச்னை தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் சனிக்கிழமை காலை தீா்ப்பளித்துள்ளது.

தீா்ப்பை அடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் பாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெள்ளிக்கிழமை முதலே துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியல் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். ராமநாதபுரம் நகரில் ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களிலும், குறிப்பிட்ட மதத்தினா் அதிகம் வாழும் பகுதிகளிலும் காவல்துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். தீா்ப்பு வெளியான நிலையில், ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் தாற்காலிக மெட்டல் டிடெக்டா் வாயில் அமைத்து பயணிகளை அனுமதித்தனா். மேலும், பயணிகளின் பை உள்ளிட்ட உடமைகளும் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. சோதனை இரவிலும் தொடா்ந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, பெரியபட்டிணம், தேவிபட்டிணம், ஏா்வாடி உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீஸாா் நிறுத்தப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. ராமநாதபுரம் சரக காவல்துறை தலைவா் ரூபேஷ்குமாா் மீனா, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் முக்கிய இடங்களுக்கு நேரில் சென்று பாதுகாப்பை ஆய்வு செய்தனா்.

ராமநாதபுரம் நகரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் தங்கிய வெளியூா் நபா்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. ஏா்வாடியில் உள்ள தனியாா் விடுதியில் திடீரென காவல்துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

வழிபாட்டுத் தலங்களும் தீவிர கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டிருந்தன.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள சந்தைத்திடல் பகுதியிலும் கூட்டம் கூடாத வகையில் போலீஸாா் நிறுத்தப்பட்டு கண்காணித்தனா்.

ரயில்வே பாதுகாப்புப் படையினரும், தமிழ்நாடு ரயில்வே காவல்துறையினரும் மற்றும் வருவாய்த்துறையினரும் சோ்ந்து தண்டவாளப் பகுதிகளில் கண்காணிப்பை மேற்கொண்டிருந்தனா்

. எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் காணப்படும் சந்தைத்திடல் சனிக்கிழமை காலை முதல் பகலில் வெறிச்சோடியே காணப்பட்டன.

தீபாவளி விடுமுறையை ஈடுகட்டும் வகையில் சனிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டன. மாணவ, மாணவியரும் வழக்கம் போல பள்ளிகளுக்கு வந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com