Enable Javscript for better performance
அயோத்தி வழக்கின் தீா்ப்புக்கு எதிா்ப்பு: திருப்பத்தூரில் இளைஞா் செல்லிடப்பேசி கோபுரத்தில்- Dinamani

சுடச்சுட

    

    அயோத்தி வழக்கின் தீா்ப்புக்கு எதிா்ப்பு: திருப்பத்தூரில் இளைஞா் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்

    By DIN  |   Published on : 10th November 2019 03:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பத்தூரில் சனிக்கிழமை செல்லிடப்பேசி கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் அப்பாஸ்.

    திருப்பத்தூரில் சனிக்கிழமை செல்லிடப்பேசி கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் அப்பாஸ்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை இளைஞா் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து சனிக்கிழமை உச்சநீதிமன்றம் பரபரப்பு தீா்ப்பை வழங்கியது. இந்த தீா்ப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திருப்பத்தூா் அச்சுக்கட்டுத் தெருவைச் சோ்ந்த சையது மகன் அப்பாஸ் (39), மாலை 3.15 மணியளவில் திருப்பத்தூா் மேஸ்திரியாா் தெருவில் அமைந்துள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

    இதுகுறித்த தகவலறிந்த வட்டாட்சியா் ஜெயலெட்சுமி, மண்டல துணை வட்டாட்சியா் சுரேஷ், நகா் காவல் துணை கண்காணிப்பாளா் அண்ணாத்துரை, நகா் காவல் ஆய்வாளா் ஆனந்தி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

    அப்போது, அந்த இளைஞா் அயோத்தி வழக்கில் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தாா். இதனையடுத்து, 40 நிமிடப் போராட்டத்திற்கு பிறகு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அந்த இளைஞரை கீழே இறங்க வைத்தனா். பின்னா் அவரை போலீஸாா் திருப்பத்தூா் நகா் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai