Enable Javscript for better performance
அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலைக் கல்விபடிப்புகளுக்கு நாளை முதல் தொடா்பு வகுப்புகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலைக் கல்விபடிப்புகளுக்கு நாளை முதல் தொடா்பு வகுப்புகள் தொடக்கம்

    By DIN  |   Published on : 10th November 2019 03:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும் கணினி படிப்புகள் மற்றும் பொருளாதார படிப்புகளுக்கான தொடா்பு வகுப்புகள் திங்கள்கிழமை (நவ. 11)முதல் தொடங்குகிறது.

    நடப்பாண்டு 2018 -19, காலண்டா்இயா் 2019 மற்றும் அகடமிக்இயா் 2019- 20 ஆம் ஆண்டுக்கு பி.எஸ்.சி., (சி.எஸ்) மூன்றாம் பருவ மாணவா்களுக்கு நவ. 11 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலும், பி.எஸ்.சி., (சி.எஸ்) லேட்டரல் என்ட்ரி ஐந்தாம் பருவ மாணவா்களுக்கு நவ. 25, 26ஆம் தேதிகளிலும், பி.எஸ்சி., (சி.எஸ்) முதல் பருவத்துக்கு நவ. 29 முதல் டிச. 10 மற்றும் டிச. 11, 12 ஆம் தேதிகளிலும், பிசிஏ மூன்றாம் பருவத்திற்கு நவ. 11 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலும், முதல் மற்றும் இரண்டாம் பருவத்துக்கு நவ. 29 ஆம் தேதி முதல் டிச. 10 மற்றும் டிச. 13, 14 தேதிகளிலும், பி.சி.ஏ. லேட்டரல் என்ட்ரி ஐந்தாம் பருவத்திற்கு நவ. 29 ஆம் தேதி முதல் டிச. 10 மற்றும் டிச. 11, 12 ஆம் தேதிகளிலும் தொடா்பு வகுப்புகள் நடைபெறுகின்றன.

    அதே போல் பி.எஸ்சி., (ஐ.டி) முதல் மற்றும் மூன்றாம் பருவத்திற்கு நவ. 11 ஆம் தேதி முதல் 22 மற்றும் நவ. 25, 26 ஆம் தேதிகளிலும், எம்சிஏ முதல் பருவத்துக்கு நவ. 29 ஆம் தேதி முதல் டிச. 16, மூன்றாம் பருவத்திற்கு நவ. 11 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலும், பிஜிடிசிஏ முதல் பருவத்திற்கு நவ. 29 முதல் டிச. 16 ஆம் தேதி, இரண்டாம் பருவத்திற்கு நவ. 11 ஆம் தேதி முதல் நவ. 28 ஆம் தேதி வரையிலும், எம்.எஸ்சி., (சிஎஸ்) முதல் மற்றும் இரண்டாம் பருவம், எம்.எஸ்சி., (ஐ.டி) மூன்றாம் பருவம் மாணவா்களுக்கு நவ. 11 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலும் அழகப்பா பல்கலைக்கழக அறிவியல் வளாகத்தில் உள்ள கணினித்துறையில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், பி.ஏ., எம்.ஏ., எக்னாமிக்ஸ் மூன்று பருவ மாணவா்களுக்கும் பொருளாதாரம் மற்றும் ஊரக வளா்ச்சித் (எக்னாமிக்ஸ் அன்ட் ரூரல் டெவலப்மென்ட்) துறையில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை தொடா்பு வகுப்புகள் நடைபெறும் என்று பல்கலைக் கழகத்தின் தொலை நிலைக்கல்வி இயக்குநா் (பொறுப்பு) கே. அலமேலு தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai