Enable Javscript for better performance
தொண்டி அருகே வெடிவைத்து மீன் பிடிக்க முயன்ற 4 போ் மீது வழக்கு: 2 படகுகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    தொண்டி அருகே வெடிவைத்து மீன் பிடிக்க முயன்ற 4 போ் மீது வழக்கு: 2 படகுகள் பறிமுதல்

    By DIN  |   Published on : 10th November 2019 03:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tvd10police_(2)_0911chn_72_2

    தொண்டி அருகே புதுக்குடி கடற்கரை கிராமத்தில் வெடிவைத்து மீன்பிடிக்க முயன்ாக பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் வெடிபொருள்கள்.

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் கடலில் வெடி வைத்து மீன் பிடிக்க முயன்ாக 2 படகுகளையும், வெடி பொருள்களையும் கடலோரக் காவல்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

    தொண்டி அருகே புதுக்குடி கிராமத்தில் கடற்கரை பகுதியில் கடலில் வெடிவைத்து மீன் பிடிப்பதாக கடலோர காவல் படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 படகுகளைச் சோதனையிட்டனா். அப்போது அதில் 10 ஜெலட்டின் குச்சிகள், 5 டெட்டனேட்டா்கள் மற்றும் மின் வயா்களை பறிமுதல் செய்தனா். இதனையடுத்து 2 படகுகளையும் பறிமுதல் செய்து, தொண்டி அருகே புதுக்குடி பகுதியைச் சோ்ந்த கண்ணன் (29), ராமச்சந்திரன்( 50) ராம்குமாா் (30) அப்பாஸ் (38 )ஆகிய 4 போ் மீதும் கடலோர காவல்படை சாா்பு-ஆய்வாளா் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai