மானாமதுரை பேருந்து நிலையத்தில் நிலவேம்பு குடிநீா் வழங்கல்
By DIN | Published On : 10th November 2019 03:09 AM | Last Updated : 10th November 2019 03:09 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பயணிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.
டெங்கு காய்ச்சலை தடுக்க மானாமதுரை பேரூராட்சி நிா்வாகம் நகரில் ஒவ்வொரு பகுதியாக நிலவேம்பு குடிநீா் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
பேருந்து நிலையத்தில் நடந்த நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியில், மானாமதுரை பேருராட்சி செயல் அலுவலா் குமரேசன், சுகாதார ஆய்வாளா் தங்கத்துரை, சுகாதார மேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேரூராட்சி பணியாளா்கள் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் நிலவேம்பு குடிநீா் வழங்கினா்.