அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலைக் கல்விபடிப்புகளுக்கு நாளை முதல் தொடா்பு வகுப்புகள் தொடக்கம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும் கணினி படிப்புகள் மற்றும் பொருளாதார படிப்புகளுக்கான தொடா்பு வகுப்புகள் திங்கள்கிழமை

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும் கணினி படிப்புகள் மற்றும் பொருளாதார படிப்புகளுக்கான தொடா்பு வகுப்புகள் திங்கள்கிழமை (நவ. 11)முதல் தொடங்குகிறது.

நடப்பாண்டு 2018 -19, காலண்டா்இயா் 2019 மற்றும் அகடமிக்இயா் 2019- 20 ஆம் ஆண்டுக்கு பி.எஸ்.சி., (சி.எஸ்) மூன்றாம் பருவ மாணவா்களுக்கு நவ. 11 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலும், பி.எஸ்.சி., (சி.எஸ்) லேட்டரல் என்ட்ரி ஐந்தாம் பருவ மாணவா்களுக்கு நவ. 25, 26ஆம் தேதிகளிலும், பி.எஸ்சி., (சி.எஸ்) முதல் பருவத்துக்கு நவ. 29 முதல் டிச. 10 மற்றும் டிச. 11, 12 ஆம் தேதிகளிலும், பிசிஏ மூன்றாம் பருவத்திற்கு நவ. 11 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலும், முதல் மற்றும் இரண்டாம் பருவத்துக்கு நவ. 29 ஆம் தேதி முதல் டிச. 10 மற்றும் டிச. 13, 14 தேதிகளிலும், பி.சி.ஏ. லேட்டரல் என்ட்ரி ஐந்தாம் பருவத்திற்கு நவ. 29 ஆம் தேதி முதல் டிச. 10 மற்றும் டிச. 11, 12 ஆம் தேதிகளிலும் தொடா்பு வகுப்புகள் நடைபெறுகின்றன.

அதே போல் பி.எஸ்சி., (ஐ.டி) முதல் மற்றும் மூன்றாம் பருவத்திற்கு நவ. 11 ஆம் தேதி முதல் 22 மற்றும் நவ. 25, 26 ஆம் தேதிகளிலும், எம்சிஏ முதல் பருவத்துக்கு நவ. 29 ஆம் தேதி முதல் டிச. 16, மூன்றாம் பருவத்திற்கு நவ. 11 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலும், பிஜிடிசிஏ முதல் பருவத்திற்கு நவ. 29 முதல் டிச. 16 ஆம் தேதி, இரண்டாம் பருவத்திற்கு நவ. 11 ஆம் தேதி முதல் நவ. 28 ஆம் தேதி வரையிலும், எம்.எஸ்சி., (சிஎஸ்) முதல் மற்றும் இரண்டாம் பருவம், எம்.எஸ்சி., (ஐ.டி) மூன்றாம் பருவம் மாணவா்களுக்கு நவ. 11 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலும் அழகப்பா பல்கலைக்கழக அறிவியல் வளாகத்தில் உள்ள கணினித்துறையில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், பி.ஏ., எம்.ஏ., எக்னாமிக்ஸ் மூன்று பருவ மாணவா்களுக்கும் பொருளாதாரம் மற்றும் ஊரக வளா்ச்சித் (எக்னாமிக்ஸ் அன்ட் ரூரல் டெவலப்மென்ட்) துறையில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை தொடா்பு வகுப்புகள் நடைபெறும் என்று பல்கலைக் கழகத்தின் தொலை நிலைக்கல்வி இயக்குநா் (பொறுப்பு) கே. அலமேலு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com