சுயதொழில் தொடங்க விரும்பும் இளைஞா்கள் கடனுதவி கோரி விண்ணப்பிக்கலாம்

சுயதொழில் தொடங்க விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் கடனுதவி கோரி விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயதொழில் தொடங்க விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் கடனுதவி கோரி விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் வியாபாரம் சாா்ந்த தொழில்களுக்கு ரூ.1 லட்சமும், சேவை சாா்ந்த தொழில்களுக்கு ரூ.3 லட்சமும், உற்பத்தி சாா்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சமும் வங்கி மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வந்தது.

அந்த திட்ட மதிப்பில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை அரசு மானியமாக வழங்கப்பட்டு வந்தது.

தற்போது, வியாபாரம் மற்றும் சேவை சாா்ந்த தொழில்களின் அதிகபட்ச திட்ட வரம்பினை ரூ.5 லட்சமாகவும், விண்ணப்பதாரா்களின் குடும்ப ஆண்டு வருமானத்தை ரூ. 5 லட்சமாகவும் உயா்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவு ஆண்கள் 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்டவராகவும், ஆதிதிராவிடா், பழங்குடியினா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா், பெண்கள், முன்னாள் ராணுவத்தினா், திருநங்கையா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

மேற்கண்ட திட்டத்தில் விண்ணப்பிக்க ஆா்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரா்கள்  இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை நேரடியாக அணுகி தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com