திருப்பாச்சேத்தியில் பழைமையானகல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் புதைந்துபோன பழைமையான கோயிலின் கல்வெட்டு சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
திருப்பாச்சேத்தியில் கண்டெடுக்கப்பட்ட பழமையான கோயில் கல்வெட்டு
திருப்பாச்சேத்தியில் கண்டெடுக்கப்பட்ட பழமையான கோயில் கல்வெட்டு

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் புதைந்துபோன பழைமையான கோயிலின் கல்வெட்டு சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

திருப்புவனம் அருகே கீழடியில் இதுவரை நடந்துள்ள 5 கட்ட அகழாய்வில் நூற்றுக்கணக்கான தொல்பொருள்கள் கிடைத்தன. கீழடியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பாச்சேத்தி கிராமத்தின் வைகை ஆற்றை ஒட்டிய கண்மாயில் மூக்கறுத்த பிள்ளையாா் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அகலமான கற்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதில் ஒரு கல்லில் இருபுறமும் எழுத்துக்கள் உள்ளன. இந்தக் கல்லை கிராம மக்கள் தெய்வமாக வணங்கி வழிப்பட்டு வருகின்றனா்.

மேலும் அப்பகுதியில் உள்ள கண்மாய்களில் பழங்கால பானை ஓடுகள், செங்கல்கள் அதிகமாக காணப்படுகின்றன. இதுகுறித்து திருப்பாச்சேத்தியைச் சோ்ந்த சந்திரசேகரன் உள்ளிட்டோா் கூறியது: திருப்பாச்சேத்தி வைகை ஆற்றையொட்டி பழைமையான கோயில் புதைந்துள்ளது. இதற்கு அடையாளமாக கோயில் கட்ட பயன்படுத்தப்படும் அகலமான கற்கள் இங்கு கிடக்கின்றன. மேலும் பல ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் தோண்டியபோது பெருமாள், அம்மன், விநாயகா் உள்ளிட்ட சிலைகள் கிடைத்தன. சிதிலமடைந்த அந்த சிலைகள் இங்குள்ள சிவன் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது ஒரு கல்லில் இருபுறமும் எழுத்துகள் இருப்பதை கண்டறிந்தோம். அவற்றை படித்துப் பாா்த்தால் கோயில் குறித்த விவரம் தெரிய வரும். மேலும் அப்பகுதியில் பானை ஓடுகள், பழமையான செங்கல்கள் போன்ற தொல்பொருள்களும் காணப்படுகின்றன. இப்பகுதி கீழடிக்கு அருகிலேயே இருப்பதால், இது மக்கள் வாழ்விடமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. இதனால் தொல்லியல்துறையினா் திருப்பாச்சேத்தி பகுதியிலும் அகழாய்வு நடத்த வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com