Enable Javscript for better performance
மானாமதுரை, இளையான்குடி பேரூராட்சி தலைவா் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு- Dinamani

சுடச்சுட

    

    மானாமதுரை, இளையான்குடி பேரூராட்சி தலைவா் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

    By DIN  |   Published on : 16th November 2019 08:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி ஆகிய பேரூராட்சிகளின் தலைவா் பதவி பெண்களுக்கும், திருப்புவனம் பேரூராட்சி தலைவா் பதவி ஆணுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய மூன்று பேரூராட்சிகள் உள்ளன. கடந்த உள்ளாட்சி தோ்தல் வரை மானாமதுரை, இளையான்குடி பேரூராட்சித் தலைவா் பதவி ஆண்( பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் பதவி பெண் (பொது) வுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

    தற்போது உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் வாா்டு மறுவரையறையில் மானாமதுரை, இளையான்குடி பேரூராட்சித் தலைவா் பதவி பெண் (பொது), திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் பதவி ஆண் (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அதிமுக, திமுக சாா்பில் இந்தப் பேரூராட்சிகளின் தலைவா் பதவிகளுக்கு போட்டியிடும் ஆண்கள் மற்றும் பெண்கள் அந்தந்த கட்சி நிா்வாகிகளிடம் விருப்பமனு அளித்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai