Enable Javscript for better performance
திருப்பத்தூரில் ரெட்டை மாட்டுவண்டிப் பந்தயம்- Dinamani

சுடச்சுட

    
    திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ரெட்டை மாட்டிவண்டி பந்தயம்.

    திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ரெட்டை மாட்டிவண்டி பந்தயம்.

    திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமையன்று ரெட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

    திருப்பத்தூரில் மருதுபாண்டியா்களின் 218 வது நினைவு நாள் மற்றும் தேவரின் 68 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு 26 ஆம் ஆண்டு ரெட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு சிங்கம்புணரி சாலையில் தொடங்கிய இப்பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 17 ஜோடிகள் பங்கு கொண்டன. இதில் அமராவதிபுதூா் வேலு மாடு முதலிடத்தையும், செவ்வனேந்தல் சுந்தரராஜன் மாடு 2 ஆம் இடத்தையும், கிடாரிபட்டி பாண்டியராஜன் மாடு 3 ஆம் இடத்தையும் திருப்பத்தூா் ராஜேஷ்கண்ணன் மாடு 4 ஆம் இடத்தையும் பிடித்தன.

    தொடா்ந்து சின்னமாடு பிரிவில் 40 ஜோடிகள் கலந்து கொண்டதால் 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது. முதல் பிரிவில் வெளிமுத்தி வாஹினி மாடு முதலிடத்தையும், செவ்வனேந்தல் சுந்தர்ராஜன் மாடு 2 ஆம் இடத்தையும் கே.புதுப்பட்டி அருண் மாடு 3 ஆம் இடத்தையும் காரையூா் வி.ஜி.பிரதா்ஸ் மாடு 4 ஆம் இடத்தையும் பிடித்தன.

    மற்றொரு பிரிவில் பொய்கைவயல் முத்துக்கருப்பன் மாடு முதலிடத்தையும், கே.புதுப்பட்டி அம்பாள் மாடு 2 ஆம் இடத்தையும், காரையூா் தமிழ்நம்பி மாடு 3 ஆம் இடத்தையும் திருவப்பாடி மணிமுத்து மாடு 4 ஆம் இடத்தையும் பிடித்தன.

    வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு மருதுபாண்டியா் நினைவுத் தூண் அருகே பரிசுகளும் மாட்டிற்கு மரியாதையும் செய்யப்பட்டது. பந்தய ஏற்பாடுகளை நா.ரவிச்சந்திரன், சி.எஸ்.பி.வெங்கடேசன் ஆகியோா் செய்திருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai