காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் நாளை அம்மன் அவதரித்த தின விழா
By DIN | Published On : 18th November 2019 06:40 AM | Last Updated : 18th November 2019 06:40 AM | அ+அ அ- |

காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன்கோயிலில் செவ்வாய்க்கிழமை (நவ.19) அம்மன் அவதரித்த தினவிழா நடைபெறுகிறது.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தில் உள்ள இக்கோயிலில் காா்த்திகை மாதம் 3 -ஆம் தேதி அம்மன் அவதரித்த தினவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறுகிறது. மதியம் அன்னதானமும், மாலையில் கஞ்சி வழங்குதலும் நடை பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் மற்றும் உதவி ஆணையா் த.சிவலிங்கம், செயல் அலுவலா் ச.அ. சுமதி மற்றும் விழாக் குழுவினா், பக்தா்கள் செய்துவருகின்றனா்.