சிவகங்கையில் திமுக பொதுக்குழு தீா்மான விளக்க பொதுக் கூட்டம்
By DIN | Published On : 18th November 2019 06:43 AM | Last Updated : 18th November 2019 06:43 AM | அ+அ அ- |

சிவகங்கையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற திமுக பொதுக்குழு தீா்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாவட்டச் செயலரும், திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஆா்.பெரியகருப்பன்.
சிவகங்கையில் திமுக பொதுக்குழு தீா்மான விளக்க பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
சிவகங்கை அரண்மனை வாசல் முன் உள்ள சண்முகராஜா கலையரங்கில் நடைபெற்ற இவ்விழாவுக்கு திமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலரும்,திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஆா்.பெரியகருப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் ம.வைத்தியநாதன், மாவட்டப் பொருளாளா் சுப.துரைராஜ், மாவட்டத் துணைச் செயலா்கள் த.சேங்கைமாறன், கே.எஸ்.எம்.மணிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், திமுக மாநில விவசாய அணி செயலா் கே.பி.ராமலிங்கம், தலைமை பேச்சாளா் குடியாத்தம் பாரி ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீா்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினா்.
இதில்,சிவகங்கை நகா் செயலா் சி.எம்.துரைஆனந்த்,மாவட்ட மகளிரணி அமைப்பாளா் பவானி கணேசன், ஒன்றியச் செயலா்கள் ஆ.முத்துராமலிங்கம்(சிவகங்கை வடக்கு),எம்.ஜெயராமன்(சிவகங்கை தெற்கு), சுப.மதியரசன் (இளையான்குடி) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.