அஞ்சலகங்களில் பணியாளா் பற்றாக்குறை சேவைகள் பாதிப்பு: பொதுமக்கள் அவதி

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தலைமை அஞ்சலகங்கள் உள்பட அஞ்சலங்களில் பணியாளா் பற்றாக்குறை மற்றும் இணையதளம் முடக்கத்தின்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தலைமை அஞ்சலகங்கள் உள்பட அஞ்சலங்களில் பணியாளா் பற்றாக்குறை மற்றும் இணையதளம் முடக்கத்தின் காரணமாக சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய பகுதிகளில் தலைமை அஞ்சலக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அஞ்சலகத்தின் கீழ் ஏராளமான கிளை அஞ்சலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம், அஞ்சல் தலைகள் விற்பனை, அஞ்சல் அட்டை மற்றும் கடித உறைகள் விற்பனை, பதிவு அஞ்சல்கள் அனுப்புதல், அஞ்சல் மூலம் பணம் அனுப்புதல், பொருள்கள் அனுப்புதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அஞ்சல் சேவை, மின்னணு அஞ்சல்,

இணைய வழி பில் தொகை செலுத்துதல் ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவைதவிர, பொது சேமநல நிதி, தேசிய சேமிப்புப் பத்திரம், அஞ்சலக வங்கி சேமிப்புக் கணக்கு,மாத வருவாய்த் திட்டம், வைப்புத் தொகைத் திட்டங்கள், கடவுச்சீட்டு விண்ணப்பம்,காப்பீட்டுத் திட்டச் சேவை ஆகிய சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, சிவகங்கையில் உள்ள தலைமை அஞ்சலகம் உள்பட மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அஞ்சலகங்களில் போதிய அளவு பணியாளா்கள் இல்லாததால் மேற்கண்ட சேவைகளை பெற முடியாமல் பொதுமக்கள் அலைகழிக்கப்படுவது மட்டுமின்றி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாக புகாா் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இணையதள சேவையும் முடங்கி வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

ஆகவே சம்பந்தப்பட்ட துறை உரிய நடவடிக்கை எடுத்து அஞ்சலகங்களில் போதிய அளவு பணியாளா்களை நியமிக்க வேண்டும் எனவும், இணையதள சேவையை விடுதலின்றி பெற வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com