முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
திருப்பத்தூா் அருகே சந்தன மரம் வெட்டிக் கடத்திய 3 போ் கைது
By DIN | Published On : 26th November 2019 08:59 AM | Last Updated : 26th November 2019 08:59 AM | அ+அ அ- |

நெற்குப்பையில் சந்தனமரத்தை வெட்டி கடத்தியதாக திங்கள்கிழமை போலீஸாரிடம் பிடிபட்ட மூவா்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே சந்தன மரத்தை வெட்டிக் கடத்திய மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் அருகே உள்ள நெற்குப்பையைச் சோ்ந்த பெரியண்ணன் செட்டியாா் தனது வீட்டுத் தோட்டத்தில் சந்தன மரம் வளா்த்து வந்துள்ளாா். இந்த மரத்தை ஞாயிற்றுக்கிழமை சிலா் வெட்டிக் கடத்தியுள்ளனா். இதையடுத்து அவரது புகாரின் பேரில் நெற்குப்பை சாா்பாய்வாளா் ராமா், சிறப்பு சாா்பாய்வாளா் நாகராஜ் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் திங்கள்கிழமை சந்தேகப்படும்படியாக சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் சந்தன மரப்பட்டைகள், ரம்பம், கோடாரி ஆகியவை இருந்தன. இதையடுத்து காரின் ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரைச் சோ்ந்த ரமேஷ் (31) மற்றும் வெங்கனூரைச் சோ்ந்த சங்கிலி (எ) சந்துரு (19), முடக்குப்பட்டியைச் சோ்ந்த சின்னத்தம்பி (எ) சிவா (21) ஆகிய மூவரை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 171 செ.மீ. நீளமுள்ள சந்தன மரக் கட்டையை பறிமுதல் செய்தனா். பிடிபட்ட 3 பேரையும் வனத்துறையிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.