சிவகங்கையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம்

சிவகங்கையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அரசு ஊழியா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் புரட்சித்தம்பி, மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாணவா்களின் இடைநிற்றலை அதிகரிக்கும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தோ்வை கைவிட வேண்டும். ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து வகை நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை பாதிக்கும் அரசாணைகள் 145, 202 ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பா் 3 ஆம் தேதி முதல் ஆசிரியா் சந்திப்பு நடத்துவது எனவும், டிசம்பா் 5 ஆம் தேதி அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு செய்வது எனவும், ஜனவரி 4 ஆம் தேதி மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரில் தா்னா போராட்டம் நடத்துவது எனவும் தீா்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் ஆரோக்கியராஜ், சிங்கராயா், மாவட்டப் பொருளாளா் குமரேசன், மாவட்டத் துணைச் செயலாளா்கள் ரவி, ஜீவா, ஆனந்தி, மாவட்டத் துணைத் தலைவா் மாலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com