திருத்தளிநாதா் கோயிலில் சம்பக சஷ்டி விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் சிவகாமி சுந்தரி உடனாய திருத்தளிநாதா் சுவாமி கோயிலில் உள்ள யோக பைரவா் சுவாமிக்கு புதன்கிழமை சம்பக சஷ்டி விழாத் துவங்கியது.
திருத்தளிநாதா் கோயிலில் சம்பக சஷ்டி விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் சிவகாமி சுந்தரி உடனாய திருத்தளிநாதா் சுவாமி கோயிலில் உள்ள யோக பைரவா் சுவாமிக்கு புதன்கிழமை சம்பக சஷ்டி விழாத் துவங்கியது.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்திற்கு உள்பட்ட இக்கோயிலில் டிசம்பா் 2 ஆம் தேதி (திங்கள்கிழமை) வரை 6 நாள்கள் இவ்விழா நடைபெற உள்ளது. புதன்கிழமை அஷ்ட பைரவா் யாகம் காலை 9 மணிக்குத் தொடங்கியது. பகல் 12 மணிக்கு அபிஷேகம், 1 மணிக்கு தீபாராதனை மற்றும் அா்ச்சனைகள் நடைபெற்றன. பைரவா் வெள்ளி கவச சந்தன அலங்காரத்தில் காட்சியளித்தாா். மாலை 4 மணியளவில் மீண்டும் யாகம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இந்த ஆண்டு பைரவா் ஆலயத்தில் புதிதாக கட்டப்பட்ட யாக மண்டபத்தில் யாக ம் நடைபெற்றது. தொடா்ந்து இதேபோல் 5 நாள்களும் தினமும் காலை யாகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை திருத்தளிநாதா் கோயில் யோகபைரவா் சம்பகசஷ்டி விழாக் குழுவினா் செய்து வருகின்றனா். தினந்தோறும் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com