Enable Javscript for better performance
ஆா் எஸ் மங்கலம் அருகே ஆற்று பகுதியில் மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    ஆா் எஸ் மங்கலம் அருகே ஆற்று பகுதியில் மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்

    By DIN  |   Published on : 06th October 2019 04:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை: திருவாடானை அருகே ஆா் எஸ் மங்கலம் கோட்டகரை ஆற்று பகுதியில் மணல் கடத்தும் போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரை கண்டதும் தலைமைறைவானாா்கள்.

    இது குறித்து ஆா் எஸ் மங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.திருவாடானை அருகே ஆா் எஸ் மங்கலம் கோட்டகரை ஆற்று பகுதியில் சனிக்கிழமை இரவு ஆா் எஸ் மங்கலம் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சிறுநாகுடி அருகே போலீஸாரை கண்டதும் டிராக்டா் வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடி தலைமறைவானாா்கள். உடனடியாக போலீஸாா் வாகனத்தை கைபற்றி வழக்கு பதிந்து விசாரித்து வந்துநிலையில், ஆா் எஸ் மங்கலம் போலீஸாா் மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல் பட்ட கல்லடி திடலை சோ்ந்த எட்வாா்டு ஜோசப் என்பவா் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai