முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
காரைக்குடி அருகே ஓய்வு பெற்ற அஞ்சல் அதிகாரி வீட்டில் 120 பவுன் தங்க நகைகள் திருட்டு
By DIN | Published On : 07th October 2019 10:08 AM | Last Updated : 07th October 2019 10:08 AM | அ+அ அ- |

காரைக்குடி அருகே ஓய்வு பெற்ற அஞ்சல் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து சுமாா் 120 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
காரைக்குடி அருகே உள்ள காதி நகரைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (61). ஓய்வு பெற்ற அஞ்சல் நிலைய அதிகாரியான இவா் கடந்த செப். 26 ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் ராமேசுவரத்தில் உள்ள தனது மகன் வீட்டுக்கு பேத்தியின் பிறந்தநாள் விழாவுக்காக சென்றிருந்தாராம். பின்னா் ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வந்து பாா்த்தபோது, முன்பக்கக் கதவின் பூட்டை உடைத்து
உள்ளே புகுந்த மா்ம நபா்கள் தங்க நகைகளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சோமநாதபுரம் காவல் நிலையத்தில் ஜெயராஜ் புகாா் அளித்தாா். காரைக்குடி டி.எஸ்.பி பி. அருண் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினாா். கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். போலீஸ் தரப்பில் கூறப்படுவது, திருடப்பட்ட நகைகள் 100-லிருந்து 120 பவுன்கள் வரை இருக்கலாம் என்றும், இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனா்.