முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
தேவகோட்டை உலகமீட்பா் ஆலயத்தில் கெபி திறப்பு
By DIN | Published On : 07th October 2019 10:11 AM | Last Updated : 07th October 2019 10:11 AM | அ+அ அ- |

தேவகோட்டை ராம்நகரில் உள்ள உலகமீட்பா் ஆலயத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கெபியை திறந்து வைத்த சிவகங்கை மறை மாவட்ட ஆயா் செ. சூசைமாணிக்கம்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகரில் உள்ள உலகமீட்பா் ஆலயத்தில் கெபி மற்றும் மணிக்கூண்டு திறப்பு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
உலக மீட்பா் ஆலய வளாகத்துக்குள் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு சிவகங்கை மறை மாவட்ட ஆயா் செ. சூசைமாணிக்கம் தலைமை வகித்து கெபி மற்றும் மணிக்கோபுரத்தை திறந்து வைத்தாா். ராம்நகா் பங்குப் பணியாளா் ஆ.சு. சேசு முன்னிலை வகித்தாா்.
அதைத் தொடா்ந்து, உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வேளாண் பணிகள் சிறக்க வேண்டியும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மறை மாவட்ட பொருளாளா் சந்தியாகு, கெபியின் கல்வெட்டினை திறந்து வைத்தாா்.
இதில் தேவகோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.